TNPSC Pothu Tamil Questions – 2025 Exams

By karkandukanitham@gmail.com

Published On:

TNPSC Pothu Tamil Questions

TNPSC Pothu Tamil Questions – 2025 Exams:

பகுதி-அ (தமிழ் தகுதித் தேர்வு)

Part-A (Tamil Eligibility Test)

வினாக்கள் : 1 – 100

மொத்த மதிப்பெண்கள் : 150

1. ஒற்றுப்பிழை கண்டறிக.

(A) கனாக் கண்டேன்

(B) ஓடா குதிரை

(C) திருவளர் செல்வன்

(D) குதிரை தாண்டியது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

2. எழுத்துப் பிழையற்ற தொடரைத் தேர்ந்தெடு.

(A) கிணரில் போட்டேன்

(B) சுவற்றில் வரைந்தேன்

(C) பூமியை வளம் வருவேன்

(D) வயிறு பசிக்கிறது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

3. சரியான வினைச்சொல்லைத் தேர்ந்தெடு.

(A) ஓடுதல்

(B) மா

(C) போ

(D) நன்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

4. செயலைக் குறிக்கும் சொல் ______________ எனப்படும்.

(A) பெயர்ச்சொல்

(B) வினைச்சொல்

(C) இடைச்சொல்

(D) உரிச்சொல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

5. ‘தேடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தைத் தேர்வு செய்க.

(A) தேடுகிறான்

(B) தேடிய

(C) தேடுகின்றன

(D) தேடி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

6. வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று சொல்லைக் கண்டறிக.

கேள்

(A) கேட்டு

(B) கேட்டான்

(C) கேட்ட

(D) கேட்கும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

7. ‘தணிந்தது’ – வேர்ச்சொல் அறிக.

(A) தணிந்த

(B) தணிந்து

(C) தணி

(D) தணிக்கப்பட்டு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

8. ஒருமை பன்மை அறிந்து சரியான தொடரைத் தேர்க.

(A) நான் அவன் அல்ல

(B) எழுதியது இவள் அல்ல

(C) இவை பூக்கள் அல்ல

(D) அவர்கள் கவிஞர்கள் அல்ல

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

9. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக.

கொள் – கோள்

(A) பெற்றுக்கொள் – கோள் சொல்லல்

(B) கொழப்பான – சொல்லல்

(C) கம்பு – பெறுதல்

(D) எழுதுகோல் – விடுதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

10. குறில்சொல்லை நெடில்சொல்லாக மாற்றி பொருள் வேறுபாடு வருமாறு ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

மலை

(A) மலை – மழை

இமயமலையில் பனிமழை பொழிந்தது.

(B) மலை – மாளை

மலையில் வளர்ந்த மரத்திலிருந்து மாளை பிரித்து எடுத்தனர்.

(C)  மலை – மாலை

மக்கள் மலையில் மாலை நேரத்தில் ஏறினர்.

(D) மலை – மழலை

தாய் தந்தையர் கொடைக்கானல் மலைக்கு இன்பச்சுற்றுலா செல்லும்போது தங்கள் மழலையை தவற விட்டனர்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

TNPSC Pothu Tamil Questions

tnpsc maths test batch

11. பிழை திருத்தம், சந்திப்பிழை

வண்ணம் + படங்கள் என்னும் சொல்லைச் சேர்க்கும் போது கிடைப்பது.

(A) வண்ணம்படங்கள்

(B) வண்ணமயமான படங்கள்

(C) வண்ணப் படங்கள்

(D) வண்ணமான படங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

12. பொருள் தரும் ஓர் எழுத்து.

உயர்வு

(A) தே

(B) பே

(C) சே

(D) பை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

13. பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் கண்டறிக.

எனக்கு ‘சில்க் சட்டை’ இருக்கிறது.

(A) பருத்தி சட்டை

(B) காவி சட்டை

(C) பட்டு சட்டை

(D) கதர் சட்டை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

14. கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக.

அது ஒரு இனிய பாடல்

(A) அஃது ஒரு இனிய பாடல்

(B) ஒரு அஃது இனிய பாடல்

(C) அது ஒரு இனிய பாடல்

(D) ஒரு இனிய பாடல் அது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

15. ஊர்ப்பெயரின் மரூஉ – வை எழுதுக.

‘மன்னார்குடி’

(A) மன்னார்

(B) குடிமன்னார்

(C) மன்னை

(D) மன்னையூர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

16. ஒரு பொருள் பன்மொழியைக் கண்டறிக.

உலகம்

(A) இயம்பு, உரை

(B) பரிதி, கதிரவன்

(C) தரணி, நானிலம்

(D) மகவு, சேய்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

17. பொருந்தாச் சொல்லைத் தேர்ந்து எடுத்து எழுதுக.

மேதி என்பது

(A) எருமை

(B) பகடு

(C) மாடு

(D) வேரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

18. ஒரே பொருளைத் தரும் இரு சொற்களைக் கண்டறிக.

விசும்பு

(A) பகலவன், வானம்

(B) ஆகாயம், வானம்

(C) ஆம்பல், விண்

(D) சூரியன், சந்திரன்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

19. கும்பி என்பதன் பொருள்

(A) கால்

(B) வயிறு

(C) உடல்

(D) கண்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

20. சரியான தொடரைக் கண்டறிக.

(A) நிலம் நீர், தீ காற்று, வான் என்பன ஐம்பூதங்கள்.

(B) நிலம், நீர், தீ, காற்று வான், என்பன ஐம்பூதங்கள்.

(C) நிலம், நீர், தீ, காற்று, வான் என்பன ஐம்பூதங்கள்.

(D) நிலம், நீர் தீ, காற்று, வான் என்பன ஐம்பூதங்கள்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

TNPSC Pothu Tamil Questions

21. மரபுப் பிழையற்ற தொடரைத் தேர்வு செய்க.

(A) யானை கர்ஜிக்கும்

(B) யானை பிளிரும்

(C) யானை கத்தும்

(D) யானை கூச்சலிடும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

22. பொருத்தமானதைத் தேர்ந்தெடு.

(A) நேற்று மழை பெய்யும்

(B) நேற்று மழை பெய்தது

(C) நேற்று மழை பெய்கிறது

(D) நேற்று மழை பெய்து கொண்டிருக்கிறது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

23. பலவின்பால் சொல்லைக் கண்டறிக.

(A) வந்தார்கள்

(B) மாடுகள்

(C) வந்தான்

(D) காடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

24. பலர்பாலைக் குறிக்கும் சொல் எது?

(A) அவன்

(B) மாடுகள்

(C) அது

(D) அவர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

25. தன்வினைத் தொடரைக் கண்டறிக :

(A) அவன் திருந்தினான்

(B) அவன் திருத்தப்பட்டான்

(C) அவன் திருத்தினான்

(D) அவன் திருத்துகிறான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

26. செய்வினைத் தொடரைக் கண்டறிக:

(A) கவிதா உரை படிப்பித்தாள்

(B) கவிதாவால் படிக்கப்பட்டது

(C) கவிதா உரை படித்தாள்

(D) கவிதா படிக்காதே

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

27. சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல் :

சொற்களை ஒழுங்குபடுத்துக.

(A) வென்றதைப் பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.

(B) வென்றதைப் பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.

(C) பகைவரை வென்றதைப் பாடும் இலக்கியம் பரணி ஆகும்.

(D) பகைவரை வென்றதைப் பரணி பாடும் இலக்கியம் ஆகும்.

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

28. சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக :

(A) பாரதியார் பாடினார் எங்கள் சாதி காக்கை குருவி

(B) காக்கை குருவி பாரதியார் பாடினார் எங்கள் சாதி

(C) பாரதியார் எங்கள் சாதி காக்கை குருவி என்று பாடினார்

(D) காக்கை குருவி எங்கள் சாதி – என்று பாரதியார் பாடினார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

29. கலைச்சொல் தருக:

Irrigation Technology

(A) அறிவியல் தொழில்நுட்பம்

(B) விண்வெளி தொழில்நுட்பம்

(C) இரசாயனத் தொழில்நுட்பம்

(D) பாசனத் தொழில்நுட்பம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

30. ‘FICTION’ என்பதன் கலைச்சொல்.

(A) இசைவு

(B) நுழைவு

(C) விளைவு

(D) புனைவு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

TNPSC Pothu Tamil Questions

31. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க.

Classical Literature

(A) செவ்விலக்கியம்

(B) பக்தி இலக்கியம்

(C) பண்டைய இலக்கியம்

(D) நவீன இலக்கியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

32. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் அறிக.

Satellite

(A) மின்னணுக் கருவிகள்

(B) பதிவிறக்கம்

(C) போர்க் கருவிகள்

(D) செயற்கைக்கோள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

33. கலைச்சொல் அறிக:

Sailor

(A) சிறைக்காப்பாளர்

(B) மாலுமி

(C) போர்வீரன்

(D) விமானி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

34. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் 1978ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி, எந்த வயது நிறைவடைந்த தமிழறிஞர்கள் விண்ணப்பிக்கலாம்?

(A) 61

(B) 60

(C) 59

(D) 58

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

35. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

பால் ________.

(A) குடி

(B) பருகு

(C) சாப்பிடு

(D) உண்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

36. மரபுத் தொடரின் பொருளைத் தேர்வு செய்க.

சேவல் ______.

(A) கொக்கரிக்கும்

(B) அகவும்

(C) கூவும்

(D) கரையும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

37. உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

‘கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல’

(A) எதிர்பாரா நிகழ்வு

(B) தற்செயல் நிகழ்வு

(C) எதிர்பார்த்த நிகழ்வு

(D) எதிர்பார்க்கும் நிகழ்வு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

38. உவமைத் தொடரின் பொருள் தருக.

வாழையடி வாழையாக

(A) நீண்டகாலம் வாழ்தல்

(B) தலைமுறை தலைமுறையாக

(C) சிறப்புப் பெறுதல்

 (D) பேணிக் காத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

39. உவமைத் தொடரின் பொருள் எழுதுக.

ஆயிரங்காலத்துப் பயிர்

(A) நீண்ட காலமாக இருப்பது

(B) ஆயிரம் வருடம் வளரும் தானியம்

(C) நீண்ட காலம் வாழாமை

(D) ஆயிரம் மரங்களின் தொகுதி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

40. குற்றமுறையீட்டு மனுவை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்?

(A) Review Petition

(B) Requesting Petition

(C) Common Petition

(D) Complaint Petition

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

TNPSC Pothu Tamil Questions

41. ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லைத் தேர்ந்தெழுதுக.

Dubbing

(A) ஒலிச்சேர்க்கை

(B) பட வீழ்த்தி

(C) ஒளிச்சேர்க்கை

(D) பார்வை நிலைப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

42. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்.

Excavation – நேரான தமிழ்ச்சொல் எது?

(A) அகழாய்வு

(B) கல்வெட்டியல்

(C) பொறிப்பு

(D) சிற்பக்கலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

43. ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுக்க.

Ultraviolet Rays

(A) அகசிவப்புக் கதிர்கள்

(B) புற சிவப்புக் கதிர்கள்

(C) புற ஊதாக் கதிர்கள்

(D) சூரிய ஒளிக்கதிர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

44. “Cave Paintings” என்னும் ஆங்கிலச் சொல்லுக்கிணையான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

(A) புதர் ஓவியங்கள்

(B) துளை ஓவியங்கள்

(C) மலை ஓவியங்கள்

(D) குகை ஓவியங்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

45. நடுவணரசு, உ.வே.சா. அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் 2006 ஆம் ஆண்டு ______ வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது.

(A) நூல்நிலையம்

(B) பதிப்பகம்

(C) ஓலைச்சுவடி

(D) அஞ்சல் தலை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

46. துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட கவிஞர் யார்?

(A) சி. இலக்குவனார்

(B) முடியரசன்

(C) கண்ணதாசன்

(D) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

47. ‘தமிழ்ச் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்’ எனப் புகழப்படுவர் யார்?

(A) தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்

(B) பாவலரேறு பெருஞ்சித்திரனார்

(C) தேவநேயப்பாவாணர்

(D) சி. இலக்குவனார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

48. ‘ஏலாதி’- என்ற நூலின் ஆசிரியர்

(A) நல்லாதனார்

(B) நப்பூதனார்

(C) கணிமேதாவியார்

(D) ஔவையார்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

49. ஏழு சீர்களைக் கொண்ட ஈரடி வெண்பாக்களால் ஆன நூல்

(A) திருக்குறள்

(B) அந்தாதி

(C) இரட்டைக் கலம்பகம்

(D) இரட்டைக் காப்பியம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

50. விடுபட்ட சீர் கண்டறிக.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவுஇலா                                                        

ஊக்கம் _________ உழை.

(A) உடையான்

(B) உடைமை

(C) போல

(D) குழையும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

TNPSC Pothu Tamil Questions

51. நிரப்புக.

வள்ளுவர் வழி நின்று விடை தருக.

ஒழுக்கமாக வாழும் அனைவரும் ________ அடைவர்.

(A) பெருமை

(B) பொருள் வசதி

(C) சீரும் சிறப்பும்

(D) மேன்மை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

52. இருவினைகளின் பொருள் வேறுபாடறிந்து சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

சேர்ந்து – சேர்த்து

(A) நானும் என் தம்பியும் சேர்த்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம்

(B) நானும் என் தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்த்து மகிழ்ந்தோம்

(C) நானும் என் தம்பியும் சேர்ந்து பணத்தைச் சேர்ந்து மகிழ்ந்தோம்

(D) நானும் என் தம்பியும் சேர்த்து பணத்தைச் சேர்ந்து மகிழ்ந்தோம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

53. சரியான தொடரைத் தேர்ந்தெடு.

(விரிந்து – விரித்து)

I. விரித்த நூலால் அறிவு விரிந்தது.

II. விரிந்த நூலால் அறிவு விரித்தது.

III. பூவிதழ் விரிந்தது; மயில்தோகை விரித்தது.

IV. பூவிதழ் விரித்தது; மயில்தோகை விரிந்தது.

(A) I மற்றும் II சரி

(B) III மற்றும் IV சரி

(C) I மற்றும் III சரி

(D) II மற்றும் IV சரி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

54. ஒற்றுப்பிழையற்ற தொடரைத் தெரிவு செய்க.

(A) வாழ்க்கை படகு

(B) வெண்டைக்காய்ப் பொரியல்

(C) தண்ணீர் தொட்டி

(D) மோர்குழம்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

55. எதிர்ச்சொல் தருக.

ஈதல்

(A) தருதல்

(B) வழங்கல்

(C) ஏற்றல்

(D) மறுத்தல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

56. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்.

சரியான இணையைத் தேர்ந்தெடு.

(A) கீர்த்தி – வானம்

(B) கீர்த்தி – இராஜராஜ சோழன்

(C) கீர்த்தி – புகழ்

(D) கீர்த்தி – நீரோடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

57. ‘அழகிய மரம்’ – எச்ச வகையை தெரிவு செய்க.

(A) தெரிநிலைப் பெயரெச்சம்

(B) எதிர்காலப் பெயரெச்சம்

(C) குறிப்புப் பெயரெச்சம்

(D) இறந்தகாலப் பெயரெச்சம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

58. ‘நில்’ என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்க.

(A) நின்றான்

(B) நின்றவன்

(C) நிற்பான்

(D) நிற்பாய்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

59. எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய வினா எழுத்துகளுள் மொழியின் முதலில் வருபவை

(A) ஓ, யா, ஏ

(B) ஆ, ஓ, ஏ

(C) ஆ, ஓ

(D) எ, யா, ஏ

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

60. தமிழ் எழுத்துக்களில் இன எழுத்து இல்லாத எழுத்து எது?

(A) உயிர் எழுத்து

(B) ஆய்த எழுத்து

(C) மெய் எழுத்து

(D) நெடில் எழுத்து

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

TNPSC Pothu Tamil Questions

61. ஒலி வேறுபாடறிந்து பொருத்தமானதைத் தேர்ந்தெடு.

அரம் – அறம்

(A) தருமம் – ஒரு கருவி

(B) பாதி – தருமம்

(C) பாம்பு – பாதி

(D) ஒரு கருவி – தருமம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

62. பின்வரும் சொற்களைத் திருத்தி எழுதுக.

பிழையான சொல்

1. தெண்றல்

2. கன்டம்

3. மன்டபம்

(A) தெண்றல், கண்டம், மன்டபம்

(B) தென்றல், கன்டம், மண்டபம்

(C) தென்றல், கண்டம், மண்டபம்

(D) தெண்றல், கன்டம், மன்டபம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

63. சேர்த்தெழுதல்

‘நீள் + உழைப்பு’ – என்னும் சொல்லை சேர்த்து எழுதக் கிடைப்பது.

(A) நீலுழைப்பு

(B) நீணுழைப்பு

(C) நீடுழைப்பு

(D) நீளுழைப்பு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

64. பிரித்தெழுதல்.

இடமெல்லாம்

(A) இடம் + மெல்லாம்

(B) இடம் + எல்லாம்

(C) இட + எல்லாம்

(D) இட + மெல்லாம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

65. பிரித்தெழுதுக.

‘வெண்குடை’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(A) வெண் + குடை

(B) வெண்மை + குடை

(C) வெள்ளை + குடை

(D) வெம்மை + குடை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

66. தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள்.

(A) தாறு, குலை, பிள்ளை

(B) பிள்ளை, குலை, பைங்கூழ்

(C) குலை, மடலி, பிள்ளை

(D) பிள்ளை, மடலி, பைங்கூழ்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

67. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்.

வெற்பு

(A) கழனி

(B) பரிதி

(C) மலை

(D) முகில்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

68. சரணாலயம் என்பதன் வேறுபெயர்.

(A) வலசைபோதல்

(B) வாழ்விடம்

(C) புகலிடம்

(D) காப்பகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

69. சரியான பொருளை அறிக.

முரலும்

(A) இசை

(B) கலை

(C) மத யானைகள்

(D) முழங்கும்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

70. இரு பொருள் தருக.

சொல்

(A) மொழி – நெல்

(B) நெல் – வழி

(C) சோறு – நெடிது

(D) சொல் – பதர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

TNPSC Pothu Tamil Questions

71. கை – என்பதன் பொருளைத் தேர்க.

(A) அஞ்சனம்

(B) உண்

(C) ஒழுக்கம்

(D) இளமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

72. எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுதல்.

சேர்த்தல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

(A) நீக்குதல்

(B) அழித்தல்

(C) தள்ளுதல்

(D) போக்குதல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

73. எங்கே, எதற்கு, எப்படி, எவை, என்ன ஆகிய சொற்களுக்குப்பின் எவ்வகை நிறுத்தற்குறி இடம்பெற வேண்டும்?

(A) வினாக்குறி

(B) வியப்புக்குறி

(C) ஒற்றை மேற்கோள்குறி

(D) இரட்டை மேற்கோள்குறி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

74. ஒரே எழுவாயில் பல தொடர்கள் வருகின்ற இடங்களில் எவ்வகை நிறுத்தற்குறி இடுதல் வேண்டும்?

(A) அரைப்புள்ளி (;)

(B) முற்றுப்புள்ளி (.)

(C) முக்காற்புள்ளி (:)

(D) காற்புள்ளி (,)

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

75. ‘அவன்’ என்ற ஆண்பால் பெயர்ச்சொல்லின் சரியான வினைமுடிவைத் தெரிவு செய்க.

(A) அவன் வந்தது

(B) அவன் வந்தார்

(C) அவன் வந்தாள்

(D) அவன் வந்தான்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

76. ‘அவரல பிறவே’ என்று தொல்காப்பியம் குறிப்பிடும் திணை எது?

(A) விரவுத்திணை

(B) உயர்திணை

(C) பொதுத்திணை

(D) அஃறிணை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

77. சொல்லையும் பொருளையும் பொருத்துக.

(a) தீர்வன                           1.  நீங்குபவை

(b) தெளிவு                         2. நற்காட்சி

(c) ஓர்தல்                           3. நல்லறிவு

(d) கூற்றவா                      4. பிரிவுகளாக

            (a)        (b)        (c)        (d)

(A)       1          2          3          4

(B)       2          1          3          4

 (C)      3          1          2          4

 (D)      1          3          2          4

 (E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

78. தொடர்வகை அறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க.

அப்துல் நேற்று வருவித்தான் ___________.

(A) செய்தித் தொடர்

(B) வினாத் தொடர்

(C) தன்வினைத் தொடர்

(D) பிறவினைத் தொடர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

79. கலைச்சொல் அறிக.

Transparent

(A) ஒளி ஊடுருவக் காட்சி

(B) ஒளிபரப்பு

(C) ஒளிபரப்புக் கோபுரம்

(D) அலைவரிசை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

80. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லைத் தெரிவு செய்க.

Nanotechnology

(A) உயிரித் தொழில்நுட்பம்

(B) மீநுண் தொழில்நுட்பம்

(C) விண்வெளித் தொழில்நுட்பம்

(D) விண்வெளிக் கதிர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

TNPSC Pothu Tamil Questions

81. கலைச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.

Valley

(A) மலை

(B) அருவி

(C) பள்ளத்தாக்கு

(D) காடு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

82. Advocate என்பதன் கலைச்சொல் :

(A) வழக்கறிஞர்

(B) பதிவுரு வழக்குரைஞர்

(C) வழக்குரைஞர்

(D) முதுநிலை வழக்குரைஞர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

83. Directing என்பதற்குத் தமிழில் _________ எனப்படும்.

(A) இயங்குதல்

(B) இசைவளித்தல்

(C) இயக்குதல்

(D) இயங்காமை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

84. பழமொழியின் பொருளைத் தேர்வு செய்து எழுதுக.

அளவுக்கு ______________.

(A) மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

(B) மிஞ்சினால் அமிர்தமும் பஞ்சு

(C) மிஞ்சினால் அமிர்தமும் மஞ்சு

(D) அமிர்தமும் நஞ்சு மிஞ்சினால்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

85. பழமொழியின் பொருளைத் தேர்வு செய்க.

விருந்தும் ____________.

(A) மருந்தும் இரண்டு நாள்

(B) மருந்தும் மூன்று நாள்

(C) மருந்தும் ஐந்து நாள்

(D) மருந்தும் ஒரு நாள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

86. பழமொழி உணர்த்தும் சரியான பொருளைக் கூறுக.

மண்குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கலாமா?

(A) தகுதியுள்ளவரை நம்பி, நாம் செயலில் இறங்குவது

(B) தகுதியில்லாதவரை நம்பி, நாம் செயலில் இறங்கலாமா

(C) நாம் ஆற்றில் இறங்குவது

(D) நாம் செயலில் செய்வது

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

87. மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

ஆ ___________.

(A) மந்தை

(B) கூட்டம்

(C) நிரை

(D) குவியல்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

பீஹார் மாநிலத்தின் மையப் பகுதியான நாளந்தாவுக்கு அருகில் உள்ள ராஜ்கிர் நகரில் கி.பி. 5ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்டது நாளந்தா பல்கலைக்கழகம். இங்குள்ள ரத்னோ தாதி என்ற 9 மாடி கட்டிடத்தில் ‘உண்மையின் மலை’ என்ற நூலகத்தில் 90 லட்சம் புத்தகங்கள், புனிதமான கையெழுத்து பிரதிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. நாளந்தா, உலகின் முதல் உண்டு உறைவிட பல்கலைக்கழகமாக விளங்கியது. இங்கு 2,000 ஆசிரியர்கள், 10,000 மாணவர்கள் இருந்தனர். பவுத்தம் பற்றிய ஆய்வுப் படிப்புகளுடன் வானியல், மருத்துவம், தர்க்கம், கணிதம் போன்ற பாடங்களுடன் கற்பிக்கப்பட்டன.

88. நாளந்தா பல்கலைக்கழகம் அமைந்திருந்த ஊர் எது?

(A) ராஜ்கிர்

(B) ராசுகிர்

(C) ராகிர்

(D) கிர் ராஜ்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

89. நாளந்தா பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களின் எண்ணிக்கை.

(A) 1,000

(B) 10,000

(C) 1,00,000

(D) 2,000

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

90. நாளந்தா பல்கலைக்கழகம் யார் காலத்தில் கட்டப்பட்டது?

(A) பல்லவர்கள்

(B) முகலாயர்கள்

(C) குப்தர்கள்

(D) சோழர்கள்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

TNPSC Pothu Tamil Questions

91. முதல் உண்டு உறைவிடப் பல்கலைக்கழகம் எது?

(A) சென்னைப் பல்கலைக்கழகம்

(B) அண்ணாப் பல்கலைக்கழகம்

(C) நாளந்தா பல்கலைக்கழகம்

(D) அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

92. நாளந்தா பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள நூல்களின் எண்ணிக்கை.

(A) 10,000

(B) 2,000

(C) 80 லட்சம்

(D) 90 லட்சம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

93. பூங்கொடி என்னும் காவியத்துக்காக _____________ இல் தமிழக அரசு முடியரசன் அவர்களுக்கு பரிசு வழங்கியது

(A) 1965

(B) 1960

(C) 1980

(D) 1966

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

94. “கலங்காதிரு மனமே” என்ற பாடலை எழுதியவரைக் கண்டறிக.

(A) பாரதிதாசன்

(B) கண்ணதாசன்

(C) வைரமுத்து

(D) நாகூர் ரூமி

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: B

95. ‘தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்’ என வீரமாமுனிவருக்குப் புகழாரம் சூட்டியவர் யார்?

(A) தேவநேயப்பாவாணர்

(B) பாரதியார்

(C) மஸ்தான் சாகிபு

(D) ரா.பி. சேதுப்பிள்ளை

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

96. சென்னையிலுள்ள எப்பகுதியில் சமயப்பணி ஆற்றினார் ஜி.யு. போப்?

(A) அடையாறு

(B) திருவல்லிக்கேணி

(C) சாந்தோம்

(D) பெசன்ட் நகர்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

97. நிரப்புக.

சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

(A) மூன்று

(B) நான்கு

(C) ஐந்து

(D) ஆறு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: C

98. பொருத்தமானதைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

திரிகடுகத்திலுள்ள ஒவ்வொரு பாடலிலும் __________ கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

(A) மூன்று

(B) ஐந்து

(C) பத்து

(D) ஏழு

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: A

99. கீழ்க்கண்ட குறளின் விடுபட்ட சீர் கண்டறிக.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்

களரனையர் ___________ தவர்.

(A) அல்லா

(B) தல்லா

(C) மல்லா

(D) கல்லா

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

100. சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

(A) செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம் அருட்செல்வம்

(B) செல்வத்துள் செல்வம் அருட்செல்வம் பொருட்செல்வம்

(C) பொருட்செல்வம் செல்வத்துள் செல்வம் அருட்செல்வம்

(D) அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

(E) விடை தெரியவில்லை

ANSWER KEY: D

TNPSC Pothu Tamil Questions

Related Posts

Leave a Comment

Item added to cart.
0 items - 0.00